2011 உலகப் பார்வை

ஜனவரி 1
எஸ்தோனியா நாடானது யூரோ நாணயத்தை முதன் முதலாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 17வது நாடாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைந்தது.

ஜனவரி 9 - 15
தெற்கு சூடான் தன்னை ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக் கொள்ள வாக்கெடுப்பு நடத்தியது.

ஜனவரி 14
ஒருமாத கால போராட்டத்திற்கு பிறகு துனிஷியா நாட்டின் ஜனாதிபதி பதவி விலகினார்

- பென் அலி: ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

பெப்ரவரி 14
எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பதவி விலகினார்.  அதன் பின் இராணுவம் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற தேர்தல் முறைப்படி நடைபெறும் என அறிவித்தது.

- எகிப்திய போராட்டத்தில் புதிய திருப்பம்: முபாரக் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதிப்பு
- எகிப்து அதிபரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்காவின் புதிய திட்டம்: சுலைமானை இடைக்கால அதிபராக்க முடிவு
- எகிப்தில் திடீர் திருப்பம்: சீர்திருத்த குழு அமைக்க சம்மதம்
- எகிப்து கலவரங்கள்: முபாரக்கிற்கு அமெரிக்காவின் அழைப்புகள்
- எகிப்து போராட்டம் முடிவுற்ற நிலையில் ஏமனில் போராட்டம் தொடங்கியது
- எகிப்து அதிபர் முபாரக்குக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவித் தொகை: ராணுவ ஆட்சி வழங்குகிறது

மார்ச் 11
ஜப்பானில் 9.1 ரிக்டர் அளிவில் நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் 15,480 மக்கள் பலியானார்கள், 3,296 பேரைக் காணவில்லை. இதன் பின் உலக அளவில் 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டது.

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: ஆழிப்பேரலையால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவிப்பு இறந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை(வீடியோ இணைப்பு)
ஜப்பானைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை (வீடியோ இணைப்பு) 
ஜப்பானில் அணுசக்தி வாயு கசிவு: மக்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவு (வீடியோ இணைப்பு)
ஜப்பானில் 12 ஆயிரம் பேர் பலி: மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
ஜப்பானில் 4வது அணு உலையும் வெடித்தது

மார்ச் 17
லிபியாவில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். லிபியாவின் இராணுவ வீரர்கள் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர். இதனால் ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு லிபியாவின் வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

லிபியாவில் விமானங்கள் பறக்க தடை: பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றம்

ஏப்ரல் 11
ஐவெரி கோஸ்ட் நாட்டு ஜனாதிபதி லாரண்ட் காக்கோ கைது செய்யப்பட்டார்.

லோரன்ட் பக்போ கைது செய்யப்பட்டுள்ளார்

ஏப்ரல் 29
இங்கிலாந்து நாட்டு இளவரசர் வில்லியம் அவரது காதலியான கேத் மிடில்டனை மணந்தார்.

- அரச திருமணம்: விழாக்கோலம் பூண்டது லண்டன்
- இன்று இளவரசர் வில்லியமின் திருமணம் (வீடியோ இணைப்பு)

 1. மே
  மே 1 – அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  மே 26 – போஸ்னியா நாட்டின் இராணுவத் தளபதி ராட்கோ மிலாடிக் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் செர்பியாவில் கைது செய்யப்பட்டார்.

 2. யூன்
  யூன் 4 – சிலி நாட்டில் வெடிமலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக தென் அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாட்டில் விமானப் போக்குவரத்து தடைபட்டது.
  யூன் 5 – ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே போராட்டக்காரர்களின் தாக்குதல் காரணமாக காயமடைந்ததை தொடர்ந்து வைத்திய சிகிச்சை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
 3. யூலை
  யூலை 7 – உலகில் முதன் முதலாக செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  யூலை 9 – தெற்கு சூடான் தனி நாடாக உதயமானது.

  யூலை 20 – வரலாற்றிலேயே முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் சோமாலியா நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.

  யூலை 22 – நோர்வேயில் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டின் காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர்.

 4. ஓகஸ்ட்
  ஓகஸ்ட் 5 - செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது புகைப்படங்களின் மூலமாக நாசாவால் உறுதி செய்யப்பட்டது.

  ஓகஸ்ட் 20 -28 போராட்டக்காரர்களால் லிபியாவின் தலைநகரான திரிபோலி கைப்பற்றப்பட்டது.

 5. செப்ரெம்பர்
  செப்ரெம்பர் 19- பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 434 பேர் உயிரிழந்தனர்.
 6. அக்டோபர்
  அக்டோபர் 18 – 1027 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

  அக்டோபர் 20 – லிபியாவின் ஜனாதிபதி மும்மர் கடாபி சிர்தே நகரில் போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  அக்டோபர் 23 – துருக்கியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 604 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2200 கட்டிடங்கள் சேதமடைந்தது.

  அக்டோபர் 27 – பிரஸ்ஸல்ஸ் மாநகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் யூரோ கடன் நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்புக்கான தொகையானது 1 டிரில்லியான உயர்த்தப்பட்டது.

  அக்டோபர் 31 - உலகத்தில் மொத்த மக்கள் தொகையானது 7 பில்லியனைத் தொட்டது.

  யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை தனி உறுப்பு நாடாக அங்கீகரித்தது. இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 107 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.

 7. டிசம்பர்
  டிசம்பர் 15- ஈரான் போர் முடிவடைந்தது என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.

  டிசம்பர் 16 – பிலிப்பைன்சில் வாஷி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.

  டிசம்பர் 19- வடகொரியா தலைவர் கிம் ஜாங் மரணம் அடைந்ததாக அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டது.

Last update: 2013-11-22 14:20:04
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நீதிபதியாக பதவியேற்ற கனடா நாட்டின் முதல் திருநங்கை: சட்ட துறை அமைச்சர் பாராட்டு (வீடியோ இணைப்பு)
தாகத்திற்கு தண்ணீர் கொடுக்காததால் உயிரிழந்த 85 வயது மூதாட்டி: மன்னிப்பு கோரிய மருத்துவமனை
குடிமக்கள் கைகளில் துப்பாக்கியை கொடுங்கள்: பிரான்ஸ் அரசுக்கு டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை
வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி
கலாச்சார சீரழிவு காதலர் தினம்: பாகிஸ்தான் ஜனாதிபதி
’வடகொரிய ஜனாதிபதியை கொல்ல வேண்டும்’: தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி பேச்சு
அதிகரிக்கும் அகதிகளால் சிக்கலில் சிக்கிய ஏஞ்சலா மெர்க்கல்: ஆதரவு அளித்த பிரபல ஹோலிவுட் நடிகர்
பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த பெண்: அதிரடியாக கைது செய்த கனேடிய பொலிசார்
பாம்பு, பல்லிகளுடன் விளையாடும் குழந்தைகள்: ஊக்குவிக்கும் தந்தை! (வீடியோ இணைப்பு)
ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாத அரசு ஊழியர்: பெரும் தொகை அபராதம் விதித்த நிர்வாகம்
 
   
   
 
2014 உலகப் பார்வை